அறத்துப்பால் - துறவறவியல் - வெகுளாமை
குறள் 301:
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்கலைஞர் உரை:
காக்கின்என் காவாக்கா.
தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?.மு.வ உரை:
பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், பலிக்காத இடத்தில் காத்தால் என்ன, காக்கா விட்டால் என்ன?.சாலமன் பாப்பையா உரை:
எங்கே தன் கோபம் பலிக்குமோ அங்கே கோபம் கொள்ளாதவனே உண்மையாகவே கோபம் கொள்ளாதவன்; பலிக்காத இடத்தில் கோபத்தைத் தடுத்து என்ன? தடுக்காமல் விட்டுத்தான் என்ன?.Translation:
Where thou hast power thy angry will to work, thy wrath restrain;Explanation:
Where power is none, what matter if thou check or give it rein?.
He restrains his anger who restrains it when it can injure; when it cannot injure, what does it matter whether he restrain it, or not ?.குறள் 302:
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்கலைஞர் உரை:
இல்அதனின் தீய பிற.
வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும். மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதைவிடக் கேடு வேறொன்றுமில்லை.மு.வ உரை:
பலிக்காத இடத்தில் (தன்னை விட வலியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு. பலிக்கும் இடத்திலும் (மெலியவரித்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை.சாலமன் பாப்பையா உரை:
பலிக்காத இடத்தில் கோபம் கொள்வது நமக்கே தீமை; பலிக்கும் இடத்தில் கோபம் கொண்டாலும் அதை விடத் தீமை வேறு இல்லை.Translation:
Where power is none to wreak thy wrath, wrath importent is ill;Explanation:
Where thou hast power thy will to work, 'tis greater, evil still.
Anger is bad, even when it cannot injure; when it can injure; there is no greater evil.குறள் 303:
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீயகலைஞர் உரை:
பிறத்தல் அதனான் வரும்.
யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்.மு.வ உரை:
யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.சாலமன் பாப்பையா உரை:
தீமை வருவது எல்லாம் கோபத்தால்தான்; அதனால் எவரிடமானாலும் சரி, கோபம் கொள்வதை விட்டுவிடுக.Translation:
If any rouse thy wrath, the trespass straight forget;Explanation:
For wrath an endless train of evils will beget.
Forget anger towards every one, as fountains of evil spring from it.குறள் 304:
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்கலைஞர் உரை:
பகையும் உளவோ பிற.
சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும்.மு.வ உரை:
முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?.சாலமன் பாப்பையா உரை:
முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?.Translation:
Wrath robs the face of smiles, the heart of joy,Explanation:
What other foe to man works such annoy?.
Is there a greater enemy than anger, which kills both laughter and joy ?.குறள் 305:
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்கலைஞர் உரை:
தன்னையே கொல்லுஞ் சினம்.
ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்.மு.வ உரை:
ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதானால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும், காக்கா விட்டால் சினம் தன்னையே அழித்து விடும்.சாலமன் பாப்பையா உரை:
தனக்குத் துன்பம் வராமல் காக்க விரும்பினால் கோபம் கொள்ளாமல் காக்கவும், காக்க முடியாது போனால் உடையவரையே சினம் கொல்லும்.Translation:
If thou would'st guard thyself, guard against wrath alway;Explanation:
'Gainst wrath who guards not, him his wrath shall slay.
If a man would guard himself, let him guard against anger; if he do not guard it, anger will kill him.குறள் 306:
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்கலைஞர் உரை:
ஏமப் புணையைச் சுடும்.
சினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சினமென்னும் தீயே இருப்பதால், அது அவரை மட்டுமின்றி, அவரைப் பாதுகாக்கும் தோணி போன்ற சுற்றத்தையும் அழித்துவிடும்.மு.வ உரை:
சினம் என்னும் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு ஒருவனுக்கு இனம் இன்பத் தெப்பத்தையும் சுட்டழிக்கும்.சாலமன் பாப்பையா உரை:
சேர்ந்தவரைக் கொல்லி எனப்படும் கோபம், சேர்ந்தவரை மட்டும் அன்று; சேர்ந்தவர்க்குத் துணையாக இருப்பவரையும் எரித்துவிடும்.Translation:
Wrath, the fire that slayeth whose draweth near,Explanation:
Will burn the helpful 'raft' of kindred dear.
The fire of anger will burn up even the pleasant raft of friendship.குறள் 307:
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடுகலைஞர் உரை:
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும். அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்.மு.வ உரை:
(தன் வல்லமை புலப்படுத்தச்) சினத்தை பொருளென்று கொண்டவன் அழிதல், நிலத்தை அறைந்தவனுடைய கை தப்பாதது போல் ஆகும்.சாலமன் பாப்பையா உரை:
நிலத்தில் அடித்தவன் கை, வேதனையில் இருந்து தப்ப முடியாதது போலக், கோபத்தைக் குணமாகக் கொண்டவனும் வேதனை அனுபவத்திலிருந்து தப்ப முடியாது.Translation:
The hand that smites the earth unfailing feels the sting;Explanation:
So perish they who nurse their wrath as noble thing.
Destruction will come upon him who ragards anger as a good thing, as surely as the hand of him who strikes the ground will not fail.குறள் 308:
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்கலைஞர் உரை:
புணரின் வெகுளாமை நன்று.
தீயினால் சுட்டெரிப்பது போன்ற துன்பங்களை ஒருவன் தொடர்ந்து செய்தாலும் அதற்காக வருந்தி அவன் உறவு கொள்ள வரும் போது சினங்கொள்ளாமல் இருப்பதே நல்லது.மு.வ உரை:
பலச் சுடர்களை உடைய பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதிலும் கூடுமானால் அவன் மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது.சாலமன் பாப்பையா உரை:
பல சுடரை உடைய பெருநெருப்பு நம் மீது பட்டது போன்ற தீமையை ஒருவன் நமக்குச் செய்தாலும், நம்மால் கோபம் கொள்ளாதிருக்க முடியுமானால் அது நம் உடலுக்கும் நல்லது.Translation:
Though men should work thee woe, like touch of tongues of fire.Explanation:
'Tis well if thou canst save thy soul from burning ire.
Though one commit things against you as painful (to bear) as if a bundle of fire had been thrust upon you, it will be well, to refrain, if possible, from anger.குறள் 309:
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்கலைஞர் உரை:
உள்ளான் வெகுளி எனின்.
உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும்.மு.வ உரை:
ஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.சாலமன் பாப்பையா உரை:
உள்ளத்துள் கோபம் கொள்ள ஒருபோதும் எண்ணாதவன், தான் நினைத்ததை எல்லாம் உடனே அடைவான்.Translation:
If man his soul preserve from wrathful fires,Explanation:
He gains with that whate'er his soul desires.
If a man never indulges anger in his heart, he will at once obtain whatever he has thought of.குறள் 310:
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்கலைஞர் உரை:
துறந்தார் துறந்தார் துணை.
எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார். சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்.மு.வ உரை:
சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர்.சாலமன் பாப்பையா உரை:
பெருங்கோபம் கொண்டவர் இருந்தாலும் இறந்தவரைப் போன்றவரே; கோபத்தை விட்டுவிட்டவர். இறக்க வேண்டியவரே என்றாலும் சாவைத் தவிர்த்தவர் போன்றவரே.Translation:
Men of surpassing wrath are like the men who've passed away;Explanation:
Who wrath renounce, equals of all-renouncing sages they.
Those, who give way to excessive anger, are no better than dead men; but those, who are freed from it, are equal to those who are freed (from death).