சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் எனப்படுவது தமிழில் கிறிஸ்துக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியம் 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பல தரப்பட்ட தொழில் நிலையுள்ளோரும் பெண்களும், நாடாளும் மன்னரும் உண்டு. சங்க இலக்கியங்கள் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரி வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய் உள்ளன. பண்டைத்தமிழரது காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளைச் சங்க இலக்கியப்பாடல்கள் அறியத்தருகின்றன.
             19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களானசி. வை. தாமோதரம்பிள்ளை, உ. வே. சாமிநாதையர் ஆகியோரது முயற்சியினால் சங்க இலக்கியங்கள் அச்சுருப் பெற்றன. சங்க இலக்கியங்களை எட்டுத்தொகை நூல்கள்,பத்துப்பாட்டு நூல்கள்,பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பெரும்பிரிவுகளாகத் தொகுத்தடக்கப்பட்டுள்ளன.
 
       சங்க இலக்கியம் என்பது எந்தெந்த நூல்கள்?

            கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்தையே தமிழ் இலக்கியத்தில் சங்க காலம் என்று
குறிப்பிடுகிறார்கள். தொன்மையான தமிழ் மொழிகளின் மிக மூத்த நூல் அகத்தியர் எழுதிய அகத்தியம் என்று
கூறப்படுகிறது. அது இப்போது கிடைக்கவில்லை. அகத்தியம் ஓர் இலக்கண நூல்.இலக்கியம் தோன்றிய
பிறகே அதனை ஒழுங்குபடுத்த இலக்கணம் தோன்றி இருக்கமுடியும் என்பதால், அகத்தியத்திற்கு
முன்னரே தமிழில் சிறப்பான இலக்கிய நூல்கள் இருந்திருக்க வேண்டும்.

       இப்போது நமக்குக் கிடைத்திருக்கிற மூத்த தமிழ் நூல் தொல்காப்பியமே. இதுவும்
இலக்கண நுல்தான்.

          [ கி.மு.300 - கி.பி 100. இந்தக் காலக்கட்டத்தில் தமிழ்ச் சங்கம் அமைத்து தமிழ்
வளர்க்க முற்பட்டனர் தமிழ் அறிஞர்கள். அப்போது தோன்றியவையே சங்கம் இலக்கியம் என்று
வழங்கப்படுகிறது.அதோடு இக்காலக் கட்டம் கடைச் சங்ககாலம் எனப்படுகிறது] 



சங்க இலக்கியத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
            
                        1. பத்துப் பாட்டு. 
                   2. எட்டு தொகை. 
                   3. பதினெண் கீழ்க்கணக்கு.

                இவற்றில் பத்துப்பாட்டு ஒரு தனிப்பட்ட நூல் அல்ல. பல நூல்களின் தொகுப்பு.
மொத்தம் எட்டுப் புலவர்கள் எழுதிய பாடல்கள் பத்தைத் தொகுத்து பத்துப்பாட்டு என்று கூறினர்.
இவற்றில் ஒவ்வொரு பாட்டும், தனி நூல் என்று சொல்லத்தக்க அளவில் முழுமையானவை.
இந்தப் பாட்கள் ஒவ்வொன்றும் 100 அடிகளுக்கு மேலானவை. 500 அடிகள் வரை கூட சில போகும்,
சில பத்துப்பாடல்கள் முருகு, பொருநாறு, பான் இரண்டு, முல்லை, பெருகு, வளமதுரைக் காஞ்சி,
மருவினிய கோலநெடுநல் வாடை, கோல் குறிஞ்சி, பட்டினப் பாலை, கடாத்தொடும் பத்து
அதாவது, 
                
                 1. திருமுருகாற்றுப்படை,
                 2. பெரும்பாணாற்றுப் படை,
                 3. சிறுபாணாற்றுப் படை, 
                 4. பொருநாற்றுப்படை,
                 5. முல்லைப்பாட்டு,
                 6. மதுரைக் காஞ்சி,
                 7.நெடுநல்வாடை, 
                 8. குறிஞ்சிப்பாட்டு,
                 9. பட்டினப்பாலை,
                 10. மலைபடுகடாம்
ஆகிய 10 நூட்கள் 10 பாட்டு.

எட்டுத் தொகை
 
எட்டுத் தொகை நூற்களும், பல புலவர்கள் இயற்றிய பாடல்களின் தொகுப்பே, ஆனால்,
இவற்றுள் எந்தப் பாடலையும் ஒரு தனி நூலாகக் குறிப்பிடமுடியாது. 100 அடிகளுக்குக்
கீழ்ப்பட்ட இந்த எட்டுத் தொகை நூலக்ளை ஒரு பழம்பாடல் இப்படி விவரிக்கிறது.

                        1. நற்றிணை
                    2. நல்ல குறுந்தொகை
                    3. ஐங்குறு நூறு
                    4. பதிற்றுப்பத்து
                    5. பரிபாடல் 
                    6. கலித்தொகை
                    7.அகநானூறு
                    8.புறநானூறு
                   
ஆகியவை இந்த 8 நூல்கள் ஆகும். 

பதினெண் கீழ்க்கணக்கு

                 கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் களப்பிரர்கள் என்போர் பாண்டிய நாட்டின் மீது
படையெடுத்து பாண்டியர்களை வென்று மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தனர்.
 இவர்கள் காலத்தில்தான் முச்சங்கத்தின் கடைசியான கடைச்சங்கம் அழிந்தது. தமிழர்களின்
கலை, கலாச்சாரம், நாகரிகம் நசிய தலைப்பட்டது. தமிழகத்தின் இருண்ட காலம் என்பார்கள்.
இதனை 'சங்கம் மருவிய காலம்' என்பார்கள்.அப்போது தோன்றிய நூல்கள் பதினெண்
கீழ்க் கணக்கு என்று அழைக்கப்படுகிறது.

               ஐந்தோ அல்லது அதற்கு கீழோ அடிகளைக் கொண்டு அமையப் பெற்றவை கீழ்க்கணக்கு
நூல். அதற்கு மேற்பட்ட அடிகளைக் கொண்டவை மேற்கணக்கு நூலகள்.(பத்துப்பாடல், எட்டுத்தொகை)

அறம்,பொருள், இன்பம் ஆகிய மூன்றையோ அல்லது மூன்றில் ஒன்றையோ விளக்கி வெண்பாவில்
எழுதப்படுவது கீழ்க் கணக்கு நூல்கள்.
               நாலடி, நான்மணி,நாநாற்பது ஐந்திணை, முப்பால்,கடுகம், கோவை. பழமொழி -
மாமூலம் இன்னிலை சொல் காஞ்சியோடு ஏலாதி என்பதும் கைநீலையுமாம் கீழ்க்கணக்கு.

(பதிணெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளைச் சொல்வது உண்டு.
அது பற்றிய குறிப்பைக் காணவில்லை.ஒருவேளை முப்பால் எனச் சொல்லப்
பட்டிருப்பதால் இருக்கலாம்?) 

                நாலடியா, நான்மணிக் கடிகை, இன்னா நாற்பது, இனிவை நாற்பது, திரிகடுகம், ஏலாதி
முதுமொழிக் காஞ்சி, முப்பால், ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்ச மூலம் ஆகிய 11
அற ஒழுக்க நூல்களும்,

               ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணை மாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார்
நாற்பது, களவழி நாற்பது ஆகிய 7 அகத்துறை (காதல்) நூல்களும் சேர்த்து 18 நூல்கள் பதினென்
கீழ்க் கணக்கு நூல்களாக வருகின்றன. இவையே சங்க கால நூற்கள். 

               இவை மட்டும்தான் சங்க கால நூற்கள் என்பதல்ல. இவை மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளன.
பல விடுபட்டுப் போய் இருக்கலாம். காலமும் கரையானும் கடற்கோளும் பிறவும் அழித்தது போக
எஞ்சியவைதான் இந்த சங்க இலக்கியங்கள். ஏட்டு சுவடிகளாகப் பலவீட்டுப் பரணிகளில் கிடந்த இந்த சங்க
இலக்கியகளை தேடி கண்ட்பிடித்து அச்சேற்றிவர்கள் அறிஞர் உ.வே.சா, பின்னத்தூர் அ.நாராயணசாமி,
சி.வை, தாமோதரம் போன்றோர்கள் ஆவார். தமிழ் கூறு நல்லுகமும் தமிழ் இலக்கிய வரலாறும்
அவர்களுக்கு எந்நாளும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.
 
Guest   (2025-01-18 7:29 AM)