பொருட்பால் - நட்பியல் - தீ நட்பு
குறள் 811:பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மைகலைஞர் உரை:
பெருகலிற் குன்றல் இனிது.
நல்ல பண்பு இல்லாதவர்கள் அன்பு வெள்ளத்தில் நம்மை மூழ்கடிப்பதுபோல் தோன்றினாலும் அவர்களது நட்பை, மேலும் வளர்த்துக் கொள்ளாமல் குறைத்துக் கொள்வதே நல்லது.மு.வ உரை:
அன்பு மிகுதியால் பருகுவார் போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து பெருகுவதை விடத் தேய்ந்து குறைவது நல்லது.சாலமன் பாப்பையா உரை:
உயிரால் உருகுவார்போல் நடிக்கும், உள்ளத்துள் நல்ல பண்பு இல்லாதவரின் நட்பு வளர்வதைவிடக் குறைவது நல்லது.Translation:
Though evil men should all-absorbing friendship show,Explanation:
Their love had better die away than grow.
The decrease of friendship with those who look as if they would eat you up (through excess of love) while they are really destitute of goodness is far better than its increase.குறள் 812:
உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மைகலைஞர் உரை:
பெறினும் இழப்பினும் என்.
தமக்குப் பயன்கிடைக்கும்போது நண்பராக இருந்துவிட்டு பயனில்லாதபோது பிரிந்து விடுகின்றவர்களின் நட்பு, இருந்தால் என்ன? இழந்தால்தான் என்ன?.மு.வ உரை:
தமக்கு பயன் உள்ள போது நட்பு செய்து பயன் இல்லாத போது நீங்கிவிடும் தகுதியில்லாதவரின் நட்பைப் பெற்றாலும் என்ன பயன், இழந்தாலும் என்ன பயன்.சாலமன் பாப்பையா உரை:
தமக்குப் பயனிருந்தால் நட்புக் கொண்டும், பயன் இல்லை என்றால் நட்பை விலக்கியும் வாழ்வதில் தமக்கு இணை இல்லாதவராய் இருப்பாரின் நட்பைப் பெற்றென்ன இழந்தென்ன?.Translation:
What though you gain or lose friendship of men of alien heart,Explanation:
Who when you thrive are friends, and when you fail depart?.
Of what avail is it to get or lose the friendship of those who love when there is gain and leave when there is none ? .குறள் 813:
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவதுகலைஞர் உரை:
கொள்வாரும் கள்வரும் நேர்.
பயனை எண்ணிப்பார்த்து அதற்காகவே நட்புக் கொள்பவரும், விலைமகளிரும், கள்வரும் ஆகிய இந்த மூவரும் ஒரே மாதிரியானவர்களே ஆவார்கள்.மு.வ உரை:
கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பரும், அன்பைக் கொள்ளாமல் பெறுகின்ற பொருளைக் கொள்ளும் விலை மகளிரும், கள்வரும் ஒரு நிகரானவர்.சாலமன் பாப்பையா உரை:
இவரிடம் நட்புக் கொள்வதால் தமக்கு என்ன கிடைக்கும் என்று எண்ணிப் பார்ப்பவரின் நட்பும், தமக்குத் தரும் கூலியை ஏற்றுக் கொள்ளும் பாலியல் தொழிலாளரும் திருடர்களும் ஒருவருக்கொருவர் சமமானவர்களே.Translation:
These are alike: the friends who ponder friendship's gainExplanation:
Those who accept whate'er you give, and all the plundering train.
Friendship who calculate the profits (of their friendship), prostitutes who are bent on obtaining their gains, and thieves are (all) of the same character.குறள் 814:
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்கலைஞர் உரை:
தமரின் தனிமை தலை.
போர்க்களத்தில் கீழே தள்ளி விட்டுத் தப்பித்து ஓடிப்போகும் குதிரையைப் போன்றவர்களின் நட்பைப் பெறுவதைக் காட்டிலும் தனித்து இருப்பது எவ்வளவோ சிறப்புடையதாகும்.மு.வ உரை:
போர் வந்த போது களத்தில் தள்ளிவிட்டு ஓடும் அறிவில்லாத குதிரை போன்றவரின் உறவை விட, ஒரு நட்பும் இல்லாமல் தனித்திருத்தலே சிறந்தது.சாலமன் பாப்பையா உரை:
போர்க்களத்தே நம்மை வீழ்த்திவிட்டுப் போய்விடும் கல்வியற்ற குதிரையைப் போன்றவரின் நட்பைக் காட்டிலும் தனிமையாக இருப்பதே முதன்மையானது.Translation:
A steed untrained will leave you in the tug of war;Explanation:
Than friends like that to dwell alone is better far.
Solitude is more to be desired than the society of those who resemble the untrained horses which throw down (their riders) in the fields of battle.குறள் 815:
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மைகலைஞர் உரை:
எய்தலின் எய்தாமை நன்று.
கீழ்மக்களின் நட்பு, பாதுகாப்பாக அமையாத தீயதன்மை கொண்டது என்பதனால், அவர்களுடன் நட்பு ஏற்படுவதைவிட, ஏற்படாமல் இருப்பதே நலம்.மு.வ உரை:
காவல் செய்து வைத்தாலும் காவல் ஆகாத கீழ்மக்களின் தீய நட்பு, ஒருவனுக்கு ஏற்படுவதை விட ஏற்படாமலிருப்பதே நன்மையாகும்.சாலமன் பாப்பையா உரை:
நாம் பல வகையில் உதவி செய்தாலும் நமக்குப் பாதுகாப்பாக இராத அற்பர்களின் நட்பு, இருப்பதிலும் இல்லாதிருப்பதே நல்லது.Translation:
'Tis better not to gain than gain the friendship profitlessExplanation:
Of men of little minds, who succour fails when dangers press.
It is far better to avoid that to contract the evil friendship of the base who cannot protect (their friends) even when appointed to do so.குறள் 816:
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்கலைஞர் உரை:
ஏதின்மை கோடி உறும்.
அறிவில்லாதவனிடம் நெருங்கிய நட்புக் கொண்டிருப்பதை விட, அறிவுடைய ஒருவரிடம் பகை கொண்டிருப்பது கோடி மடங்கு மேலானதாகும்.மு.வ உரை:
அறிவில்லாதவனுடைய மிகப் பொருந்திய நட்பை விட அறிவுடையவரின் நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நன்மை தருவதாகும்.சாலமன் பாப்பையா உரை:
அறிவற்றவனின் மிக நெருக்கமான நட்பைக் காட்டிலும் அறிவுடையார்களின் பகை, கோடி நன்மையாம்.Translation:
Better ten million times incur the wise man's hate,Explanation:
Than form with foolish men a friendship intimate.
The hatred of the wise is ten-million times more profitable than the excessive intimacy of the fool.குறள் 817:
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்கலைஞர் உரை:
பத்தடுத்த கோடி உறும்.
சிரித்துப் பேசி நடிப்பவர்களின் நட்பைக் காட்டிலும் பகைவர்களால் ஏற்படும் துன்பம் பத்துக்கோடி மடங்கு நன்மையானது என்று கருதப்படும்.மு.வ உரை:
(அகத்தில் அன்பு இல்லாமல் புறத்தில்) நகைக்கும் தன்மை உடையவரின் நட்பை விட, பகைவரால் வருவன பத்துகோடி மடங்கு நன்மையாகும்.சாலமன் பாப்பையா உரை:
சிரித்துச் செல்லும் இயல்பினராகிய நட்பைக் காட்டிலும், பகைவரால் வருவன பத்துக் கோடி மடங்கு நன்மையாம்.Translation:
From foes ten million fold a greater good you gain,Explanation:
Than friendship yields that's formed with laughers vain.
What comes from enemies is a hundred million times more profitable than what comes from the friendship of those who cause only laughter.குறள் 818:
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மைகலைஞர் உரை:
சொல்லாடார் சோர விடல்.
நிறைவேற்றக் கூடிய செயலை, நிறைவேற்ற முடியாமல் கெடுப்பவரின் உறவை, அவருக்குத் தெரியாமலேயே மெல்ல மெல்ல விட்டு விட வேண்டும்.மு.வ உரை:
முடியும் செயலையும் முடியாத படி செய்து கெடுப்பவரின் உறவை, அவர் அறியுமாறு ஒன்றும் செய்யாமலே தளரச் செய்து கைவிட வேண்டும்.சாலமன் பாப்பையா உரை:
தம்மால் செய்யக்கூடிய உதவியையும் செய்ய முடியாதவர் போல் நடித்துச் செய்யாமல் விடுபவரின் நட்பை அவரிடம் சொல்லாமலேயே விட்டுவிடுக.Translation:
Those men who make a grievous toil of what they doExplanation:
On your behalf, their friendship silently eschew.
Gradually abandon without revealing (beforehand) the friendship of those who pretend inability to carry out what they (really) could do.குறள் 819:
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறுகலைஞர் உரை:
சொல்வேறு பட்டார் தொடர்பு.
சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாதவரின் நட்பு கனவிலேகூடத் துன்பத்தைத்தான் கொடுக்கும்.மு.வ உரை:
செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவனுக்கு கனவிலும் துன்பம் தருவதாகும்.சாலமன் பாப்பையா உரை:
சொல் ஒன்று, செயல் வேறாக இருப்பவரின் நட்பு கனவிலும் கூடத் துன்பமானதாகும்.Translation:
E'en in a dream the intercourse is bitternessExplanation:
With men whose deeds are other than their words profess.
The friendship of those whose actions do not agree with their words will distress (one) even in (one's) dreams.குறள் 820:
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇகலைஞர் உரை:
மன்றில் பழிப்பார் தொடர்பு.
தனியாகச் சிந்திக்கும் போத இனிமையாகப் பழகிவிட்டுப் பொது மன்றத்தில் பழித்துப் பேசுபவரின் நட்பு தம்மை அணுகாமல் விலக்கிக் கொள்ளப்படவேண்டும்.மு.வ உரை:
தனியே வீட்டில் உள்ளபோது பொருந்தியிருந்து, பலர் கூடிய மன்றத்தில் பழித்து பேசுவோரின் நட்பை எவ்வளவு சிறிய அளவிலும் அணுகாமல் விட வேண்டும்.சாலமன் பாப்பையா உரை:
நம் வீட்டுக்குள் வந்து நட்புக் கொண்டாடிப் பலர் இருக்கும் சபையில் நம்மைப் பழிப்பவரின் தொடர்பைச் சிறிதளவும் சேரவிட வேண்டா.Translation:
In anywise maintain not intercourse with those,Explanation:
Who in the house are friends, in hall are slandering foes.
Avoid even the least approach to a contraction of friendship with those who would love you in private but ridicule you in public.