சி-மொழிப் பாடங்கள்
கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் கணிப்பொறியியல் பயிலும் மாணவர்களுக்குப் பயன்படும் விதமாகவும், தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புத் தேடுவோருக்குப் போட்டித் தேர்வுகளிலும், நேர்முகத் தேர்வுகளிலும் பயன்படும் வகையிலும், சி-மொழியின் சிறப்புக் கூறுகளை ஆழமாகவும் விரிவாகவும் எடுத்து விளக்கும் பாடங்கள் எடுத்துக்காட்டு நிரல்களுடன் இப்பகுதியில் வெளியிடப்படும்.
.....இந்த நேரத்தில்தான், டென்னிஸ் ரிட்சி, வரலாற்றுச் சிறப்புமிக்க அச்சாதனையைச் செய்தார். பி-மொழியைச் செழுமைப்படுத்தி, தன் மேதமையின் சாரத்தைப் பிழிந்து அதில் கலந்து, கம்ப்பைலர் சார்ந்த ஒரு புதிய மொழியை உருவாக்கினார். பிசிபீஎல் மொழியிலும், பி-மொழியிலும் காணாமல் போயிருந்த பொதுத்தன்மையைத் தன் மொழியில் மீட்டுத் தந்தார்.....கணிப்பொறி மொழி வல்லுநர்கள் 1960-ல் கண்ட கனவைக் கடைசியாக 1972-ல் ரிட்சி நிறைவேற்றி வைத்தார். [.....]
பாடம்-2: சி-மொழியின் சிறப்புகள்
திருக்குறளைப் பற்றித் தெரியாதவர் ஒரு தமிழறிஞராய் இருக்க முடியாது. அதுபோல சி-மொழியை அறியாதவர் ஒரு கணிப்பொறி நிரலராய் இருக்க முடியாது. ஆயிரம் மொழிகள் வந்து போனாலும் அன்றுமுதல் இன்றுவரை உயர்தனிச் செம்மொழியாய்ச் சிறப்புக் குன்றாமல் செல்வாக்குப் பெற்று விளங்குவது சி-மொழி ஆகும்..... ‘கற்றவர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு’ என்பதை மறுப்பவர் எவருமில்லை. ஆம்! சி-மொழியைக் கற்றவர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்புக் கிட்டும் என்பதில் ஐயம் எதுவுமில்லை. [.....]
பாடம்-3: சி நிரலைச் செயல்படுத்தல்
சி-மொழியில் ஜோர்டெக்-சி, போர்லாண்டு-சி, மைக்ரோசாஃப்ட்-சி, டர்போ-சி என்று எத்தனையோ வகைகளும், ஒவ்வொன்றிலும் பல்வேறு பதிப்புகளும் உள்ளன. இவை எல்லாம் பல்வேறு நிறுவனங்கள் உருவாக்கிய சி-மொழிக்கான கம்ப்பைலர்கள்..... நாம் எழுதும் சி-மொழி நிரலை ஏதேனும் ஒரு கம்ப்பைலரில் கம்ப்பைல் செய்து பிறகுதான் இயக்கிப் பார்க்க முடியும். கம்ப்பைலர்களில் பின்பற்றப்படும் வழிமுறைகளில் மிகச்சிறு வேறுபாடுகள் இருக்க முடியும். [.....]
ஒரு நிரலின் கட்டமைப்பில், இருவகைக் கூறுகள் உள்ளன. ஒன்று மரபு (Convention); மற்றொன்று விதிமுறை (Rule). மரபுகளை, நீங்கள் விரும்பினால் பின்பற்றலாம். இல்லாவிட்டால் விட்டுவிடலாம். மரபுகள் பின்பற்றப்படா விட்டாலும் அந்த நிரல் சரியாகவே செயல்படும். ஆனால் விதிமுறைகளை நிரல் எழுதும்போது கட்டாயம் கடைப்பிடித்தே ஆக வேண்டும். இல்லையேல் நிரல் கம்ப்பைல் ஆகாது அல்லது சரியாகச் செயல்படாது. [.....]
...சி-மொழியில் நான்கு அடிப்படைத் தரவினங்கள் (Basic Data Types) உள்ளன. .இவை மூலத் தரவினங்கள் (Primitive Data Types) என்றும் அழைக்கப்படுவதுண்டு. எளிய தரவினங்கள் (Simple Data Types) என்றும் கூறுவர். தரவினம் என்பது ஒரு குறிப்பிட்ட தரவை மட்டுமின்றி அதைப் பயன்படுத்துவது பற்றிய விதிமுறைகளையும் சேர்த்தே குறிக்கிறது. [.....]
...புரோகிராமில் பயன்படுத்தப்படும் டேட்டா கம்ப்யூட்டரின் நினைவகத்தில் பதிந்து வைக்கப்படுகின்றது. தேவையானபோது எடுத்தாள அதற்கு ஒரு பெயர் இருக்க வேண்டும். எனவே, புரோகிராமில் பயன்படுத்தப்படும் டேட்டாவுக்குப் பொருத்தமான ஒரு பெயரைச் சூட்டுகிறோம். அதாவது, டேட்டாவை நினைவகத்தில் பதிந்து வைக்க ஓர் இடத்தை ஒதுக்கீடு செய்து, அந்த இடத்துக்கு ஒரு பெயர் (Label) சூட்டுகிறோம். அப்பெயரையே மாறி (variable) என்கிறோம். [.....]
பாடம்-7: சி-மொழியில் மாறிலிகள்
ஒரு புரோகிராமில் எப்போதுமே மாற்றப்படும் சாத்தியக்கூறு இல்லாத ஒரு டேட்டாவை மாறிலி (Constant) என்கிறோம். சி-மொழியில் இரண்டு வகையாக மாறிலிகள் செயல்படுத்தப்படுகின்றன. (1) #define பதிலீடுகள் மூலமாக. இத்தகைய மாறிலிகள் ‘குறியீட்டு மாறிலிகள்’ (Symbolic Constants) என்று அழைக்கப்படுகின்றன. (2) const என்னும் பண்பேற்றி (Qualifier) மூலமாக. [.....]
பாடம்-8: சி-மொழியில் இனமாற்றங்கள்
ஒரு புரோகிராமில் char, int, float, double ஆகிய தரவினங்களில் அறிவிக்கப்பட்ட மாறிகளில், ஓர் இனத்தின் மதிப்பை வேறோர் இனத்தின் மதிப்பாக எடுத்தாளும் முறையே இனமாற்றம் (Type Conversion) எனப்படுகிறது. சி-மொழியைப் பொறுத்தவரைப் புரோகிராமரின் தலையீட்டிலும், புரோகிராமரின் தலையீடு இல்லாமலும் இத்தகைய இனமாற்றம் சாத்தியம். [.....]