தமிழ் இலக்கியம்
அனைத்து விதமான தமிழ் இலக்கிய நூல்களையும் இணைய வடிவில் படித்து பயனுருங்கள்!!
Read more
இலவச இணைய புத்தகங்கள்
இலவச இணைய புத்தகங்களை தரவிரக்கம் செய்து படித்து பயனுருங்கள்!
Read more
உங்கள் படைப்புகள்
உங்கள் படைப்புகளை இங்கே இலவசமாக உலக தமிழர்கள் பயனுற வெளியிடுங்கள்!
Read more

தமிழ்

தமிழ் தமிழர்களின் தாய்மொழி. தமிழ் திராவிட மொழிக் குடும்த்தின் முக்கிய மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். தென்னிந்தியாவில் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும், சிங்கப்பூரிலும் அதிக அளவில் பேசப்படும் இம்மொழி, துபாய், மலேசியா, தென்னாபிரிக்கா, மொரீசியஸ், பிஜி, ரீயுனியன், டிரினிடாட் போன்ற பல நாடுகளிலும் சிறிய அளவில் பேசப்படுகிறது. 1996-ம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி 50 இலட்சம் (85 மில்லியன்) மக்களால் பேசப்பட்டு, ஒரு மொழியை, தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட மொழிகளின் பட்டியலில், தமிழ், பதினெட்டாவது இடத்தில் உள்ளது.


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒருசில செம்மொழிகளில் ஒன்றாகும். திராவிடமொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளீல் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும்  மேலும் கவனமாகப் பழைய அமைப்புகளைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடைகூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலை உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசை ஆத்திசூடி 1000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றியது. திருக்குறள் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன் இயற்றியது.

 
 

அன்பான தமிழ் இணைய இதழ் வாசகர்களே!
உங்களது மேன்மை மிக்க படைப்புகளை இந்த இதழில்
வெளியிட வாசகர் பக்கத்தில் எழுதவும்!
மேலும் உங்கள் பொன்னான கருத்துக்களையும் வாசகர் பக்கத்தில் எழுதவும்!
 
 
POWER OF TAMIZH
 
 
தமிழ் இலக்கியம்
 
 
       தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. வாழ்வின் பல்வேறு கூறுகளை தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன. தமிழ் இலக்கியத்தில் வெண்பா,குறள்,புதுக்கவிதை, கட்டுரை,பழமொழி என பல வடிவங்கள் உள்ளன. தமிழில் வாய்மொழி இலக்கியங்களும் முக்கிய இடம் வகிக்கின்றன.  
 
வரலாறு
        
          மு. வரதராசனின் தமிழ் இலக்கியம் என்னும் நூலில் தரப்பட்டிருக்கும் தமிழ் இலக்கிய கால வகைப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட வகைப்பாடு பின்வருமாறு.
 
பழங்காலம்

                                  சங்க இலக்கியம் (கிமு 300 - கிபி 300)

                       நீதி இலக்கியம் (கிபி 300 - கிபி 500)

இடைக்காலம்
                             
                                   பக்தி இலக்கியம் (கிபி 700 - கிபி 900)
                       காப்பிய இலக்கியம் (கிபி 900 கிபி 1200)
                       உரை நூல்கள் (கிபி 1200 - கிபி 1500)
                       புராண இலக்கியம் (கிபி 1500 - கிபி 1800 )                                          
                       புராணங்கள், தலபுராணங்கள்
                       இஸ்லாமிய தமிழ் இலக்கியம்
 
இக்காலம்
                   
              பத்தொன்பதாம் நூற்றாண்டு
                                
                                  கிறிஸ்தவ தமிழ் இலக்கியம்
                       புதினம்
                  
             இருபதாம் நூற்றாண்டு
                                 
                                  கட்டுரை,
                       சிறுகதை,
                       புதுக்கவிதை,
                       ஆராய்ச்சிக்கட்டுரை.
                  
            இருபத்தோராம் நூற்றாண்டு
                               
                                அறிவியல் தமிழ்,
                         கணினித் தமிழ்.