இனிய தேவதை..!

 
பிடிக்கும்!

 
பின் இரவு..!
 
 
நட்பு காலங்கள்...!

 
நமீதா கவிதை

 
நீ சம்மதித்தால்...!

 
நீ எந்தன் வானம்!

 
காதலி
 

 
 
தொலை தூர நட்பு
 
 
 
 
நிலவு பெண்
 
 
பொல்லாத பெண்ணுலகம்
 
 
 
வான்மழை பொய்த்ததும் உண்மைதான்
வஞ்சியவள் அழகென்பதும் உண்மைதான்
பாவியவள் வஞ்சித்ததும் உண்மைதான்
பரிதவித்துப் போனது என் நெஞ்சம்தான்

கவிதைகள் பல எழுதியதும் உண்மைதான்
கண்ணே மணியே எனச் சொன்னதும் உண்மைதான்
விழியால் எனை மயக்கியதும் உண்மைதான் -அவள்
விஷமென நான் உணர்ந்ததும் உண்மைதான்

காவியுடை தரிக்க வேண்டும் உண்மைதான்
காதலை இனி மறக்க வேண்டும் உண்மைதான்
போதையில் நான் உளறவில்லை உண்மைதான் -இது
பொல்லாத பெண்ணுலகம் உண்மைதான்

 
 
வலியும், வேதனையும்
 
kavithai
 
அடிக்கு அடி.
உதைக்கு உதை.
மேற்கூறிய தண்டனை
காதலுக்கும் வேண்டுகிறேன்...
காதலுக்கான காத்திருப்புகளையும்,
பதிலுக்கு ஏங்கிடும்
பரிதவிப்புகளையும் ,
தனிமையில் கொன்றிடும்
அவஸ்தைகளையும்,
நீயும் அனுபவிக்க வேண்டுமடி..
அப்போழுதாயின் தெரியும் அல்லவே
காதலனாய் நான் ஏற்றிருக்கும்
பாத்திரத்தின் வலியும், வேதனையும்....
 
இப்படியாய் என் காதல்…
 

கம்பிக்குள்
ஓடும்
மின்சாரம் போன்றதோ,
கம்பிக்கு வெளியே
ஓடும்
காற்றைப் போன்றதோ தான்
என் காதல்.
கருவிகளின்
இசைவுகளிலோ,
இலைகளின்
அசைவுகளிலோ
உணர்ந்து கொள்ள வேண்டும்
அதன் இருப்பை.
என்னால்
காட்ட முடியாது
ஒரு பிடி காற்றையும்
கால் கிலோ
மின்சாரத்தையும்.

நினைவில் அவள் மலரும் போது ...
 
 
கண்கள் இரண்டும் வண்டினம்
கனியிதழோ மதுக்குடம்
பூவுடலோ பொற்குடம் -அவள்
காணக் கிடைக்காத பொக்கிஷம் !

இதழ் மலர்ந்தால் உதிரும் சிரிப்பு
இவள் சிரித்தால் சிதறும் முத்து
சிதறிய முத்து காற்றில் கலந்து
காதில் கேட்டது கவியாகம் - அந்தக்
கவியால் எந்தன் மனமும் அன்றே
மயங்கியது அவள் வசமாக !

என் கனவில் அவள் தேவதை
தருகின்றாள் தினம் போதையை
நேரில் அவளொரு தாரகை - அவள்
நினைவோ மயக்கும் மல்லிகை !

ஏட்டில் எழுதாத ஒவியம் - அவள்
எழுத்தில் வடிக்காத காவியம்
கவிஞன் படைக்காத அற்புதம் - அவள்
இதயம் எனக்கே அர்ப்பணம்.

ஏன் கனவுக்கு அவளே துணையானாள்
கருத்துக்கு அவளே பொருளானாள்
என் நினைவில் இன்றும் மணக்கின்றாள் - அவள் நினைவைக் கவியாய் படைக்கின்றேன் !
அணு அணுவாய் உன்னழகில்..!


 
இரு புருவமும் ஒரு சேர
மேலே தூக்கிக் காட்டி...
என்னவென்று எனை நோக்கி
உன் கண்ணாலே வினவுகிறாய்..?
கன்னி உன்றன் அழகைப்பார்த்து
என் கண்ணிமைகள்
அசையவில்லை...
அனிச்சை செயலை மறந்தபடி
அணு அணுவாய்
உன்னழகில் ஆழ்ந்து போகிறேனே...
அதை நீ அறியாயோ பெண்ணே..?


நிலவைப்பிரிந்து என்றும்..!

 
நான் துவண்டு கிடக்கும் வேளையில்
உன் மலரினும் மெல்லிய
மடியினில் எனைக் கிடத்தி...
என் தலையைக் கோதி தேற்றுவாய்..!
நான் வீழ்ந்து கிடக்கும் வேளையில்
எனை உன் வீணை மார்பில் சாய்த்து...
என் விம்மலைத் தணிப்பாய்..!
நான் கோபித்துக் கிடக்கும் வேளையில்
கொவ்வை இதழ் முத்தம் தந்து...
என் கோபத்தை உடைத்தெறிவாய்..!
இத்தனையும் எனக்குச் செய்யும்
பனி நிறை பவழ மலரவளே..!
என் இன்பத்தில் மட்டுமின்றி...
என் துன்பத்திலும் இருந்தவளே...
இருளில் நான் இருந்தபோது
நிலவாய் வெளிச்சம் தந்தவளே..!
உன்னை நானும் மறப்பேனா..?
உன் நினைவைத் துறந்து இருப்பேனா..?
மறந்தும் உயிரோடிருப்பேனா..?
நிலவைப்பிரிந்து என்றும் நீலவானம் இராது..!
அதுபோலத்தான் பெண்ணே நானும்..!