Home » 2015 » June » 24 » சென்னை மெட்ரோ ரயில் பயண கட்டணம் விவரம் வெளியீடு
5:05 PM
சென்னை மெட்ரோ ரயில் பயண கட்டணம் விவரம் வெளியீடு

சென்னை: சென்னையில் 2 கிலோ மீட்டர் முதல் 24 கிலோ மீட்டருக்கு மேலும் பயணம் செய்யும் கட்டணத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. முதல் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. தொடர்ந்து 2 முதல் 4 கிலோ மீட்டருக்கு 12 ரூபாயும், 4 முதல் 6 கிலோ மீட்டருக்கு 13 ரூபாயும், 6 முதல் 9 கிலோ மீட்டருக்கு 16 ரூபாயும், 9 முதல் 12 கிலோ மீட்டருக்கு 17 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

12 முதல் 15 கிலோ மீட்டருக்கு 19 ரூபாயும், 15 முதல் 18 கிலோ மீட்டருக்கு 20 ரூபாயும், 18 முதல் 21 கிலோ மீட்டருக்கு ரூ.21, 21 முதல் 24 கிலோ மீட்டருக்கு ரூ.22, 24 கிலோ மீட்டருக்கு மேல் 24 ரூபாயும், 27 கிலோ மீட்டருக்கு 29 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கட்டணத்தை அமல்படுத்து குறித்து மத்திய, மாநில அரசுகள் தான் முடிவெடுத்து விரைவில் அறிவிக்கும் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

Views: 2319 | Added by: Neels | Tags: மெட்ரோ ரயில், சென்னை, விவரம் வெளியீடு, பயண கட்டணம் | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]